/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாராபாத்திரம் அமைத்து கரபுரநாதருக்கு அபிேஷகம்
/
தாராபாத்திரம் அமைத்து கரபுரநாதருக்கு அபிேஷகம்
ADDED : ஏப் 08, 2024 02:17 AM
வீரபாண்டி;சேலத்தில் வெப்பம் தகிப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்க, ஒரு மாதத்துக்கு முன்பே, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நேற்று, மூலவர் சிவலிங்கம் மீது, தாராபாத்திரம் அமைக்கப்பட்டது.அதில் பன்னீர், வெட்டிவேர், விலாமிச்சை வேர், ஏலக்காய், ஜாதிக்காய், பச்சை கற்பூரம், மூலிகைகளை கலந்து வைத்து, இடைவிடாது லிங்கம் மீது விழுந்து அபிேஷகம் நடத்தி குளிர்விக்கும்படி செய்துள்ளனர்.
இதன்மூலம் உலகம் முழுதும் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வெயில் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. அபிேஷகத்துக்கு தேவையான பன்னீர், வெட்டிவேர், பச்சை கற்பூரம் ஆகியவற்றை பக்தர்கள் கொடுக்கலாம் என, சிவாச்சாரியார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

