/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்
/
தீச்சட்டி ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிர்வாகிகள்
ADDED : ஆக 06, 2024 08:28 AM
சேலம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற, தாதகாப்-பட்டி கிளை செயலர் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று தீச்சட்டி ஏந்தியபடி, மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்-களிடம், தீச்சட்டியுடன் உள்ளே அனுமதிக்க முடி-யாது என கூறி, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால், தீச்சட்டியை அணைத்து ஓரமாக வைத்து விட்டு, மனு அளித்தபின் அவர்கள் கூறி-யதாவது:
மாநகரில் பிரதான சாலைகள் தவிர, உள் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால், மக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உள் சாலை-களை சீரமைக்க வேண்டும். அத்துடன் மக்களை அதிகம் பாதிக்கும் மின்கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பபெற வேண்டும். மேட்டூர் அணை உபரிநீர் வீணாக சென்று கடலில் கலப்-பதால், அதை தடுக்க தடுப்பணை கட்டி, சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.