/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை மேலும் 3 பேருக்கு 'காப்பு'
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை மேலும் 3 பேருக்கு 'காப்பு'
அ.தி.மு.க., பிரமுகர் கொலை மேலும் 3 பேருக்கு 'காப்பு'
அ.தி.மு.க., பிரமுகர் கொலை மேலும் 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 20, 2024 09:34 AM
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 60. அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்தார். கடந்த, 3ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சி, 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட, 11 பேரை கைது செய்தனர்.
இதில் சதீஷ்குமார் உள்பட, 6 பேரை, நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதன்படி நேற்று, தாதகாப்பட்டியை சேர்ந்த அஜித், 27, யுவராஜ், 27, ஈரோடு, கருங்கல்பாளையம் மகேந்திரன், 46, ஆகியோரை கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவுன்சிலர் தனலட்சுமி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் காவலில் எடுத்த, 6 பேர், கைது செய்யப்பட்ட, 3 பேர் என, 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.