/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தே.மு.தி.க., உள்ளதால் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
/
'தே.மு.தி.க., உள்ளதால் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
ADDED : மார் 24, 2024 01:40 AM
ஆத்துார், ஆத்துார், தென்னங்குடிபாளையத்தில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
அதில் வேட்பாளர் குமரகுரு பேசியதாவது:
கடந்த, 2006, 2011, 2016 என, 3 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். 2021ல் மீண்டும் உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, 5,000 ஓட்டில் தோல்வி அடைந்தேன். 2021ல் தே.மு.தி.க., மட்டும் கூட்டணியில் இருந்திருந்தால், கூடுதலாக, 10,000 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருப்பேன். இத்தேர்தலில், தே.மு.தி.க., இடம் பெற்றுள்ளதால் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், தே.மு.தி.க., மாநில நிர்வாகி சுல்தான்பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

