/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழிமுறையை பின்பற்றி சதுர்த்தி கொண்டாட அறிவுரை
/
வழிமுறையை பின்பற்றி சதுர்த்தி கொண்டாட அறிவுரை
ADDED : ஆக 30, 2024 01:42 AM
சேலம், ஆக. 30-
செப்., 7ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: விநாயகர் சிலைகள், 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது, போலீசார் தெரிவிக்கும் சாலையில் எந்த பிரச்னையும் இல்லாமல் எடுத்துச்செல்ல வேண்டும். போலீஸ் துறையினர் தெரிவிக்கும் வழிமுறையை பின்பற்றி விழாவை அமைதியாக நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும். வாகனங்களில் சிலை எடுத்துச்செல்லும்போது பாதுகாப்பாகவும், மக்களுக்கு இடையூறு இல்லாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங், போலீஸ் துறை உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள், அனைத்து கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.