/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க 4 துறைகள் அனுமதி பெற அறிவுரை
/
சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க 4 துறைகள் அனுமதி பெற அறிவுரை
சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க 4 துறைகள் அனுமதி பெற அறிவுரை
சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க 4 துறைகள் அனுமதி பெற அறிவுரை
ADDED : செப் 03, 2024 03:10 AM
மேட்டூர்: சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, மூன்று அல்லது நான்கு துறைகளின் தடையில்லா சான்று பெற வேண்டும்.
மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் பொன்மணி தலைமையில் நடந்தது. தாசில்தார் ரமேஷ், ஆர்.ஐ.,க்கள் பங்கேற்-றனர்.
இதில் வரும், 7 ல் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பதற்கு மின்வாரியம், காவல்துறை, தீயணைப்பு துறை அதி-காரிகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
நெடுஞ்சாலையோரம் சிலைகள் வைக்கும் பட்சத்தில், சம்பந்த-பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் சான்று பெற வேண்டும். சிலைகளை வரும், 7 முதல், 9 வரை மூன்று நாட்-களில் கரைக்க வேண்டும்.
அதற்காக மேட்டூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள காவிரி பாலம் அடிவாரம், கூனான்டியூர், திப்பம்பட்டி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில் அருகில் என நான்கு இடங்களில் மட்டுமே சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு. சப்-கலெக்டர் அறிவுரை வழங்கினார்.