/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உளுந்து, பச்சைப்பயிரில் வேர் அழுகல் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை
/
உளுந்து, பச்சைப்பயிரில் வேர் அழுகல் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை
உளுந்து, பச்சைப்பயிரில் வேர் அழுகல் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை
உளுந்து, பச்சைப்பயிரில் வேர் அழுகல் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை
ADDED : ஆக 11, 2024 02:45 AM
வீரபாண்டி: உளுந்து, பச்சைப்பயறு பயிர்களில் வேர் அழுகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் வழி குறித்து வேளாண் துறை அறி-வுரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்-குனர் கார்த்திகாயினி அறிக்கை:
மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கினாலும் மண்ணில் அதிகளவில் ஈரப்பதம் இருந்தாலும் பூஞ்சாணங்களால் பயிர்கள், வேர் அழுகல் நோயால் பாதிக்கப்படும். குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு பயிர்களில், 'மேக்ரோபோமினா, பேசி-யோலினா, ரைசாக்டோனியா, பெட்டாட்டிகோலா' போன்ற பூஞ்சணங்களால், வேர் அழுகல் ஏற்படுகிறது.
பகலில் அதிக வெப்பத்தாலும், வறண்ட நிலத்தில் பாசனத்துக்-கான நீர், மழைநீர் தேங்குவதாலும் நோய் மற்ற பயிர்களுக்கு எளி-தாக பரவும். நோய் பாதித்த செடியின் இலைகள், மஞ்சள் நிறத்-துக்கு மாறி வாடி தொங்கும். பிற இலைகள் அனைத்தும் காய்ந்து உதிர்ந்து விடும். ஒரு வாரத்தில் செடி முற்றிலும் பரவி இறந்து விடும்.
இதேபோல் தண்டுகளின் அடிப்பாகத்தில் பழுப்பு நிற கோடு காணப்பட்டாலும், பட்டை உரிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து உடனே அதை பிடுங்கி அகற்ற வேண்டும். செடிகளை அகற்றினாலும் அழுகிய வேர் பாகங்கள் மண்ணில் புதைந்திருக்கும்.
இவை விதைகளில் தங்கியிருக்கும் இழை முடிச்சுகள் மூலம் முதல் நிலையில் பரவும். பூஞ்சாண வித்துகள் காற்றில் பரவு-வதன் மூலம் இரண்டாம் நிலையில் பரவும். ஒரு ஹெக்டேருக்கு, 12.5 கிலோ மட்கிய தொழு உரம் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மாவிரிடி - 4 கிராம் அல்லது பேசிலஸ் சப்டிலிஸ், 10 கிராம் அல்லது பூஞ்சாணக்கொல்லியான கார்பன்டாசிம் - 2 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
அடி உரமாக துத்தநாக சல்பேட் ஹெக்டேருக்கு, 25 கிலோ, வேப்பம் புண்ணாக்கு, 150 கிலோ இட்டு நடவு செய்த, 30வது நாள் டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது பேசிலஸ் சப்டிலிஸ், 2.5 கிலோவுடன், 25 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது மண-லுடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள வயல்களில் தேவைப்பட்டால் ஒரு லிட்டர் நீரில் கார்பன்டாசிம் - 1 கிராம் கலந்து வேர் பகுதியில் தெளித்தால் நோய் கட்டுப்படுத்தப்படும். இந்த வழிகளை பின்பற்றி விவசா-யிகள் பயன்பெறலாம்.