/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அலையன்ஸ் ஏர்' பெங்களூரு விமானம் ரத்து 6 மணி நேரம் காத்திருந்த பயணியர் விரக்தி

ADDED : மார் 29, 2024 01:44 AM

ஓமலுார்:சேலம்
விமான நிலையத்தில் இருந்து, 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம் சார்பில்
பெங்களூரு - சேலம் - கொச்சின் பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை
இயக்கப்படுகிறது. நேற்று சேலத்தில் இருந்து, 2:15 மணிக்கு பெங்களூரு
செல்லும் விமானத்தில் செல்வதற்கு, 12:30 மணிக்கு வந்த, 62 பயணியர்,
சோதனை முடிந்து தயாராக காத்திருந்தனர்.
விமானம் தாமதமாக வரும் என
தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாலை, 5:00 மணிக்கு ரத்து
செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பயணியர்,
'டெர்மினல்' வளாகத்தில், 'அலையன்ஸ் ஏர்' நிறுவன அதிகாரிகளுடன்
வாக்குவாதம் செய்தனர். பின் அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள்,
பயணியரை சமாதானப்படுத்தி, விமான நிலையத்தை விட்டு வெளியே
அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணியர் கூறியதாவது:'கனெக்டிங்'
விமானம் மூலம் பலரும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருந்த நிலையில்
விமானம் ரத்து என்றால் என்ன செய்வது? மாற்று விமானம் மூலம் ஏற்றிச்செல்ல
ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மேலும், 2 மணி நேரம் தாமதம் என்றால் டீ,
காபி, உணவு ஆகியவற்றை, விமான நிறுவனம் சார்பில் வழங்க வேண்டும்.
அதையும் செய்யவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.