ADDED : செப் 03, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஓடையில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
வீராணம், பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள், 75, இவர் நேற்று காலை இயற்கை உபாதைக்காக, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வரும் போது, தவறி ஓடையில் விழுந்துள்ளார். ஓடையில் அதிக-ளவில் தண்ணீர் ஓடியதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். வீராணம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி-சோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்-றனர்.