/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
/
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 04, 2024 04:21 AM
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்க, 8 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாற்று சான்றிதழ், மதிப்பெண், ஜாதி சான்றிதழ், மொபைல் எண், இ-மெயில் ஐ.டி., ஆதார் அட்டை, முன்னுரிமை கோரினால் அதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம், 50 ரூபாய்.
மகளிருக்கு குறைந்தபட்ச வயது, 14 மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை. ஆண்களுக்கு, 14 முதல் 40 வயது வரை தான். தனியார் தொழிற் பயிற்சிநிலையங்களில், புதுமைபெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு இணையதளம் மூலமாக வரும், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427 2400329 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.