/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்-பனை துவக்கம்
/
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்-பனை துவக்கம்
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்-பனை துவக்கம்
அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்-பனை துவக்கம்
ADDED : செப் 04, 2024 10:20 AM
திருச்செங்கோடு : ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவனத்தின் அங்கமான, அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்-பனை துவக்க விழா நாளை (வியாழக்கிழமை) காலை 9:00 மணியளவில் மனை அமைந்துள்ள பகுதியான திருச்செங்கோடு ஒ.ராஜபாளையம் அர்த்தநாரீசுவரர் நகரில் நடைபெறுகிறது.
ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவன தலைவர் அங்க-முத்து தலைமை வகிக்கிறார். சிறப்பாளராக தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறு-வனர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் கலந்து கொள்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்-பாளர் விவேகானந்தன், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் சுப்ரமணியம், திருச்செங்கோடு ஜெய்சக்தி குரூப் கம்பெனி-களின் நிர்வாக இயக்குனர் செந்தில்வடிவேலன், திருப்பூர் டெக்னோ ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அசோக்குமார், சேலம் பைரவ் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் மகேஷ்குமார் போர்வால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எல்.ஐ.சி., வீட்டு வசதி நிதி நிறுவனம், சேர்மன் கிளப் மெம்பர் மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.
ஸ்ரீ லேண்ட் மார்க் நிறுவன தலைவர் அங்க-முத்து கூறியதாவது:திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் நகர், நகராட்சி பகுதிக்கு அருகில் உள்ளது. சுற்றிலும் வீடுகள், வீட்டு மனைகளுக்கு மத்தியில் மனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 50, 40, 33, 30, 23 அடி அகலமுள்ள தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்-ளது. விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்-ளது. 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்-மட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.மனையை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி வில்லா வீடு-களும் கட்டித்தரப்படுகிறது. மனை வாங்கும் விலையில், 70 சதவீத வங்கி கடன் வசதி, வில்லா வீடுகளுக்கு, 90 சதவீத வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.இவ்வாறு கூறினார்.