/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு மறியலுக்கு முயற்சிவிவசாயிகளை தடுத்த போலீசாரால் வாக்குவாதம்

ADDED : மார் 09, 2025 01:55 AM
நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு மறியலுக்கு முயற்சிவிவசாயிகளை தடுத்த போலீசாரால் வாக்குவாதம்
அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டியில் தேசிய நெடுஞ்சாலைக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு, சர்வீஸ் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த்துறையினர், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி விவசாயிகள், மக்கள், கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு, நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை, அம்மாபேட்டை, காரிப்பட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் விவசாயிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''2009ல் நெடுஞ்சாலைக்கு, மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது. ஆனால் மாசிநாயக்கன்பட்டியில் இழப்பீடாக ஒரு சதுர அடிக்கு, 7 ரூபாய் மட்டும் கொடுத்தனர். மற்ற பகுதிகளில், இதைவிட பல மடங்கு அதிகமாக கொடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்தனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றனர்.