/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது
/
கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது
ADDED : நவ 07, 2024 01:08 AM
கார் நிறுத்துவதில் தகராறு
தந்தை - மகன் கைது
சேலம், நவ. 7-
சேலம், 3 ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 48. இவரது வீடு அருகே கோவிந்தராஜ், 57, என்பவர் வசிக்கிறார்.
இரு குடும்பத்தினர் இடையே பாதை, கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த, 4 இரவு, சீனிவாசன் காரில் வீட்டுக்கு வந்தபோது, பாதையில் கோவிந்தராஜின் மகன் சந்தானபாரதி, 31, காரை நிறுத்தியிருந்தார். இதனால் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ், சந்தானபாரதி, இவரது தம்பி வெங்கடேஷ் பிரசாத், 29, ஆகியோர், கிரிக்கெட் ஸ்டெம்பால் சீனிவாசனை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி,கோவிந்தராஜ், சந்தான பாரதியை நேற்று முன்தினம் கைது செய்த, பள்ளப்பட்டி போலீசார், வெங்கடேஷ் பிரசாத்தை தேடுகின்றனர்.