/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடிய பணத்தில் வாங்கிய பைக்கால் பிரச்னை சிறுவன் கொன்றதாக கைதான நண்பர் வாக்குமூலம்
/
திருடிய பணத்தில் வாங்கிய பைக்கால் பிரச்னை சிறுவன் கொன்றதாக கைதான நண்பர் வாக்குமூலம்
திருடிய பணத்தில் வாங்கிய பைக்கால் பிரச்னை சிறுவன் கொன்றதாக கைதான நண்பர் வாக்குமூலம்
திருடிய பணத்தில் வாங்கிய பைக்கால் பிரச்னை சிறுவன் கொன்றதாக கைதான நண்பர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 26, 2024 01:55 AM
சேலம்:திருடிய பணத்தில் வாங்கிய, விலை உயர்ந்த பைக்கை உரிமை கொண்டாடுவதில் இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் சிறுவனை கல்லால் அடித்து கொன்றதாக, கைது செய்யப்பட்ட நண்பர், போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்தார்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த, அரிசி வியாபாரி பாலகிருஷ்ணன் வீட்டில் ஒரு மாதத்துக்கு முன், 13 சவரன், 68,000 ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் கடந்த, 1ல், திருப்பூர் தெற்கு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறுவன், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, சேலத்தை சேர்ந்த சிறுவன் மணீஷ், 17, என்பதும், அவரை கொன்றது, சேலம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், 26, என்பதும் தெரிந்தது.
தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார், நாமக்கல்லில் இருந்த பிரகாஷ்ராஜை கைது செய்தனர். அவரை, சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், 3 நாட்களுக்கு முன் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, நேற்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
மணீஷ், பிரகாஷ்ராஜ் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சேர்ந்து அரிசி வியாபாரி வீட்டில் திருடி அதன்மூலம் செலவு செய்துள்ளனர். அப்போது, 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 'கே.டி.எம்., டியூக்' பைக்கை, மணீஷ் வாங்கினார். அவனுக்கு, 17 வயது என்பதால் சுல்தான் பெயரில் பதிவு செய்தார். அந்த பைக்கை, பிரகாஷ்ராஜ் வாங்கிக்கொண்டார். மணீஷ் தொடர்ந்து கேட்க, தகராறு ஏற்பட்டது. இதனால் அவனை கொல்ல பிரகாஷ்ராஜ் திட்டமிட்டார். அதன்படி பைக்கை தருவதாக கூறி, மணீ ைஷ திருப்பூர் அழைத்துச்சென்றார். அங்கு பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தபோது, மணீ ைஷ, கல்லால் தாக்கி கொலை செய்ததை வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு கூறினர்.