ADDED : ஜூலை 06, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலராக ஹெலன்குமார் உள்ளார். அங்கு ஏற்கனவே முதன்மை மருத்துவ அலுவலராக பணியாற்றிய நாகபுஷ்பராணி, தற்போது ஊட்டியில் இணை இயக்குனராக உள்ளார். அவர் ஓமலுார் மருத்துவமனையில் பணியாற்றியபோது, பல்வேறு முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல கட்ட விசாரணை நடந்து வருகிறது.
அதில் ஒரே நாளில் அதிகளவில் டீசல் வாங்கியது, முத்துநாயக்கன்பட்டியில் பாம்பு கடித்து பெண் இறந்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து, கோவை மருத்துவ துறை இணை இயக்குனர் ராஜசேகரன் நேற்று ஓமலுார் மருத்துவமனையில் விசாரித்தார். காலை, 10:00 முதல், இரவு, 7:30 மணி வரை, 3 செவிலியர், அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடந்தது.