/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
/
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2024 03:38 AM
சேலம்: ஓணம் பண்டிகையையொட்டி சேலத்தில் வசிக்கும் கேரள மாநில மக்கள், நேற்று புத்தாடை அணிந்து கொண்டாடினர். தமிழ் சங்கம் அருகே உள்ள கேரளா சமாஜத்தில் கேரள பெண்கள், வண்ண பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோலத்தை சுற்றி ஆட்டம் ஆடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல் குரங்குச்சாவடி, சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில், சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தந்திரிகள், வேதம் முழங்க அர்ச்சனை நடந்தது.
ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் வளாகம் முன் நிர்வாகிகள், பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டனர். கோவிலுக்கு வந்த பெண்கள், அத்தப்பூ கோலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாட்டை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

