/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர் வீடு புகுந்து ஆயுதங்களுடன் சூறையாடிய கும்பல் தடுக்க முயன்ற போலீஸ் மீதும் தாக்குதல்; 3 பேர் 'வளைப்பு'

ADDED : ஆக 15, 2024 01:30 AM
வீரபாண்டி, கத்தி, அரிவாளுடன், டிரைவர் வீடு புகுந்து கதவு, கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய கும்பல், தடுக்க முயன்ற போலீசாரையும் தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். ஆனால், 3 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 36. மினி சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி சவுந்தர்யா, 24. இவர்களுக்கு, 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது சவுந்தர்யா, 6 மாத கர்ப்பமாக உள்ளார். இவரது தோழியின் அண்ணனுக்கும், சவுந்தர்யாவுக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து மிரட்டிச்சென்றது. தொடர்ந்து நேற்று காலை, 10:30 மணிக்கு மீண்டும் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்து கதவு, ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கின. தடுக்க முயன்ற சவுந்தர்யாவின் கையில் வெட்டு பட்டு ரத்தம் கொட்டியது.
இதை அறிந்து அங்கு, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் இந்திராணி, எஸ்.ஐ., தமிழ்குமார், எஸ்.எஸ்.ஐ., கார்த்தி ஆகியோர் வந்தனர். அவர்களை பார்த்ததும், கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்ப முயன்றனர். ஆனால் தமிழ்குமார், கும்பல் வந்த பைக்கை மறித்து இடித்தார். இதில் இரு தரப்பினரும் விழுந்தனர். கும்பலில் ஒருவன், கத்தியால் தாக்கியதில் தமிழ்குமார் காயம் அடைந்தார்.
கும்பலில், பைக்கில் இருந்து சாலையில் விழுந்ததில் காயம் அடைந்த, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பிரசாந்த், தினேஷ்குமார், மணிகண்டன் ஆகியோரை, போலீசார் சுற்றிவளைத்தனர். சிலர் தப்பியுள்ளனர். சிக்கியவர்கள் போதையில் இருந்ததோடு, காயம் அடைந்திருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சவுந்தர்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.ஐ., சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.