/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி
/
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி
ADDED : ஆக 17, 2024 04:42 AM
சேலம்: குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய கோரி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சேலம் மாநகராட்சி, 24வது வார்டு மூலப்பிள்ளையார் கோவில் பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள சிமென்ட் குடோன் சாலை பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, மேலும் சிமென்ட் குடோன்கள் அதிகளவில் உள்ளது. கனரக வாக-னங்கள் அடிக்கடி செல்வதால், இந்த சாலை பழுதடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிக-ளிடம் மனு அளித்தும் பலனில்லை
மழை காலமாக உள்ளதால் சாலை குண்டும் குழியுமாக காட்சிய-ளிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துகளில் சிக்-குகின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்து, வார்டு கவுன்சிலர் சந்திராவிடம் தெரிவித்தபோது, 'மாந-கராட்சியில் தற்போது பணம் இல்லை, நமக்கு நாமே திட்டத்தில் வேண்டுமென்றால் சாலையை சீர்படுத்தி கொள்ளலாம். பொது-மக்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்தால் செய்ய முடியும்' என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள் மூலப்-பிள்ளையார் கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட
முயன்றனர்.
தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி சாலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்-கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

