/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
/
ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஆக 27, 2024 05:14 AM
வீரபாண்டி: ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான, காளிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். கிருத்-திகை நட்சத்திரத்தையொட்டி, நேற்று மூலவர் கந்தசாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்து சந்தனகாப்புடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதே போல் உற்சவர் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத கந்-தசாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அரசு விடுமுறையாக இருந்ததால், நேற்று கந்தசாமியை தரிசிக்க சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்தி-ருந்து வழிபட்டனர். இதே போல் ஆட்டையாம்பட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவில், வேலநத்தம் பாவடி முத்துக்குமாரசுவாமி கோவில்களில் நடந்த கிருத்திகை நட்சத்திர சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.