/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு
/
பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : மே 17, 2024 02:20 AM
ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை, 7:30 மணிக்கு கல்பகனுார், ராமமூர்த்தி நகருக்கு அரசு டவுன் பஸ்(தடம் எண்: 22) சென்று கொண்டிருந்தது. கல்பகனுார், பனந்தோப்பு வழியே சென்றபோது, எதிரே வந்த பால் வண்டி மீது மோதாமல் இருக்க, டிரைவர் செந்தில்குமார், 40, சாலையோர இடதுபுறம் பஸ்சை திருப்பினார். குறுகிய சாலையாக இருந்ததால் சாலையோர பள்ளத்தில் பஸ் சக்கரம் இறங்கியது. ஆனால் சாலையோரம் இருந்த பனை மரம், பஸ் கவிழாமல் தாங்கி பிடித்தது. இதனால் பஸ்சில் இருந்த சில பயணியர் தப்பினர்.
இதுகுறித்து ஆத்துார் கிளை பணிமனை அலுவலர்கள் கூறுகையில், 'பஸ் உடனே மீட்கப்பட்டு, மீண்டும் வழித்தடத்தில் இயக்கப்பட்டது' என்றனர்.

