/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரியில் இருந்து விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள்
/
லாரியில் இருந்து விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள்
ADDED : ஆக 04, 2024 01:16 AM
ஆத்துார், ஆத்துார், பைத்துார் செல்லும் சாலையில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது.
அங்கிருந்து ஆத்துார், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு, ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. சின்னசேலத்தில் இருந்து ஆத்துார் கிடங்குக்கு லாரிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கொண்டுவரப்பட்டன. மந்தைவெளி வழியே சென்றபோது, ரயில்வே பால பகுதியில் மூட்டை மீது கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து, 20க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் விழுந்தன. மூட்டைகளில் இருந்து சாலையில் அரிசி சிதறியது. பின் டிரைவர், மூட்டைகளை லாரியில் ஏற்றிச்சென்றார்.