/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைத்துார் ஊராட்சிக்கு உப தலைவர் தேர்வு
/
பைத்துார் ஊராட்சிக்கு உப தலைவர் தேர்வு
ADDED : ஆக 10, 2024 07:33 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி தலைவியாக இருந்தவர் கலைச்செல்வி, 50. தி.மு.க.,வை சேர்ந்த இவர் மீது தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு புகார் எழுந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜூலை, 29ல், கலைச்செல்வி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். துணைத்தலைவர் சந்திரசேக-ரிடம், தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர், துணைத்தலைவர் கையெழுத்-திட வேண்டும். தற்போது, துணைத்தலைவர், தலைவர் பொறுப்பு வகிப்பதால் மற்றொரு உறுப்பினரை உப தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
அதற்கான கூட்டம் நேற்று பைத்துார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., செந்தில் தலைமை வகித்தார். அதில், 7வது வார்டு உறுப்பினர் தமிழ்செல்வியை, உப தலைவராக தேர்வு செய்தனர். இதில், தலைவர் உள்பட, 12 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.