/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
/
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
ADDED : மே 07, 2024 10:25 AM
ஆத்துார்: ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தனிஷ்கா, பிளஸ் 2 தேர்வில், 600க்கு, 593 மதிப்பெண் பெற்று, சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவி நிரஞ்சனா, 592 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தார். மாணவர் சச்சின், 589 பெற்று, பள்ளி அளவில், 3ம் இடம் பிடித்தார். கணினி அறிவியலில், 20 பேர்; கணிதம், 10 பேர்; வணிகவியல், பொருளியல் தலா இருவர்; இயற்பியல், கணக்கு பதிவியல் தலா ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 590க்கு மேல் இருவர்; 580க்கு மேல், 4 பேர்; 570க்கு மேல், 10 பேர்; 560க்கு மேல், 16 பேர்; 550க்கு மேல், 26 பேர்; 500க்கு மேல், 82 பேர் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைவர் இளவரசு, செயலர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், பாலக்குமார், சந்திரசேகரன், பழனிவேல், மணி, முதல்வர் நளாயினிதேவி ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.