/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீகார் வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு
/
பீகார் வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு
ADDED : ஆக 17, 2024 04:36 AM
சேலம்: பீகார் மாநில வாலிபரை, கத்தியால் தாக்கி பணம் பறித்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.
பீகார் மாநிலம், பாட்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அபித் ஆலம், 31. கரூரில் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக பெங்களூரு செல்வதற்-காக நேற்று முன்தினம் அதிகாலை சேலம் வந்தார். ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே நின்ற போது, அங்கு இரு சக்கர வாக-னத்தில் வந்த மூவர், அபித் ஆலத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
பணம் தர மறுத்ததால் அவரை கத்தியால் தாக்கி விட்டு, 1,500 ரூபாயை பறித்து சென்றனர். காயமடைந்த அபித் ஆலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

