/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்குகள் மோதல்: கிரேன் ஆப்ரேட்டர் பலி
/
பைக்குகள் மோதல்: கிரேன் ஆப்ரேட்டர் பலி
ADDED : ஏப் 25, 2024 05:04 AM
மேட்டூர்: மேட்டூர், கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 34. இவரது மனைவி உமா, 34. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகம், மேச்சேரி அருகே தனியார் ஆலையில் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்தார். கடந்த, 14 இரவு, 10:30 மணிக்கு வேலை முடிந்து, 'பல்சர்' பைக்கில், ஹெல்மட் அணியாமல் வீட்டுக்கு புறப்பட்டார். ஜெ.கே.பி., திருமண மண்டபம் அருகே சென்றபோது, எதிரே, மேட்டூர் ஆர்.எஸ்., பரணி நகரை சேர்ந்த கி ேஷார் ஓட்டிவந்த, 'பல்சர்' பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

