/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு பா.ம.க., ஆலோசனை
/
தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு பா.ம.க., ஆலோசனை
ADDED : மார் 22, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., இணைந்துள்ளது.
இதையடுத்து தர்மபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சட்டசபை தொகுதி, கொளத்துார் ஒன்றிய பா.ம.க., ஆலோசனை கூட்டம், கருங்கல்லுாரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். அதில், லோக்சபா தேர்தலில் பா.ம.க, நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் மாரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

