/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்
/
வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்
வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்
வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்
ADDED : ஏப் 28, 2024 04:08 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பொம்மியம்பட்டி, இந்திரா காலனியை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவர் தற்போது கோவையில் கட்டட தொழிலாளியாக பணிபுரிகிறார்.
இவர், 'தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா குறித்து, முகநுாலில் அவதுாறாக கருத்து பதிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்' என, காடையாம்பட்டி பா.ம.க., ஒன்றிய செயலர் வெங்கடேஷ், நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதனால், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் கட்சியினர் குவிந்தனர். அவர்களை, போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.