/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் மிதந்த கணினி ஆப்பரேட்டர் சடலம்
/
மேட்டூர் அணையில் மிதந்த கணினி ஆப்பரேட்டர் சடலம்
ADDED : ஆக 05, 2024 02:14 AM
மேட்டூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஆண்டலுார் கேட்டை சேர்ந்த, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சுப்ரமணி, 49. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கால், மேட்டூர் அணை புதுவேலமங்கலம் நீர்பரப்பு பகுதியில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் அவரது சடலம் அப்பகுதியில் நேற்று மிதந்தது. மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர் சடலத்தை மீட்டனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
செத்து ஒதுங்கிய முதலை
கொளத்துார் அடுத்த செட்டிப்பட்டி, காவிரி நீர்பரப்பு பகுதி கரையோரம் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, 5 அடி நீள முதலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதை அறிந்து, கொளத்துார் வனத்துறையினர் வந்து, முதலையை கயிறு கட்டி இழுத்து அங்கிருந்து அகற்றினர்.