/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி
/
எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி
எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி
எலும்பு மூட்டு விழிப்புணர்வு நாளை மினி மாரத்தான் போட்டி
ADDED : ஆக 03, 2024 01:22 AM
சேலம், எலும்பு மூட்டு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, மினி மாரத்தான் போட்டி நாளை நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலத்தில் மிட்வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் மோகனசுந்தரம் கூறியதாவது:
இந்திய, தமிழ்நாடு எலும்பு மூட்டு அறுவை சங்கம், சேலம் மிட்வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி சார்பில் தேசிய எலும்பு மூட்டுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, கடந்த, 1ல் தொடங்கி வரும், 7 வரை, எலும்புமூட்டு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்
படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆக., 4(நாளை) காலை, 6:00 மணிக்கு மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. சேலம் ஐ.எம்.ஏ., வளாகத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி வரை சென்று மீண்டும் ஐ.எம்.ஏ., வளாகத்தில் மாரத்தான் நிறைவடையும். வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்கு, 97900 - 08492 என்ற எண்ணில் பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.