/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் மீது லாரி மோதி பங்க் உரிமையாளர் சாவு
/
கார் மீது லாரி மோதி பங்க் உரிமையாளர் சாவு
ADDED : மே 30, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த, பெட்ரோல் பங்க் உரிமையாளர் சம்பத்குமார், 59.
இவர், நேற்று சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி, 'பிகோ' காரில் சென்று கொண்டிருந்தார். மதியம், 12:30 மணிக்கு, மகுடஞ்சாவடி அடுத்த காளிகவுண்டம்பாளையத்தில் சென்றபோது, முன்புறம் சென்ற டிப்பர் லாரியை, அதன் டிரைவர், திடீரென, 'பிரேக்' போட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறிய சம்பத்குமார், லாரி மீது மோதிவிட்டார். மகுடஞ்சாவடி போலீசார், அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். மகுடஞ்சாவடி போலீசார், டிப்பர் லாரியை கைப்பற்றி, தப்பிய டிரைவரை தேடுகின்றனர்.