/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் புகுந்த பஸ்: 7 பயணியர் காயம்
/
வீட்டில் புகுந்த பஸ்: 7 பயணியர் காயம்
ADDED : ஜூன் 07, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்:ஆத்துாரில் இருந்து வாழப்பாடிக்கு தடம் எண்: 21 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று காலை, 10:30 மணிக்கு, 15 பயணியருடன் சென்றது. கரடிப்பட்டியில் சென்றபோது சாலை பள்ளத்தில் சேறு, சகதியாக இருக்க, டிரைவர் அண்ணாதுரை பஸ்சை திருப்பினார். அப்போது சாலையோரம் இருந்த மணி வீட்டின் ஒரு பகுதிக்குள் பஸ் புகுந்தது. இதில் பஸ்சின் முன்புறம், வீட்டின் முகப்பு பகுதி சேதம் அடைந்தது. தவிர பஸ்சில் பயணித்த மணி, 57, மணிமேகலை, 53, படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்றனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.