/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய விளையாட்டு நாள் வரும் ௨௯ல் போட்டிக்கு அழைப்பு
/
தேசிய விளையாட்டு நாள் வரும் ௨௯ல் போட்டிக்கு அழைப்பு
தேசிய விளையாட்டு நாள் வரும் ௨௯ல் போட்டிக்கு அழைப்பு
தேசிய விளையாட்டு நாள் வரும் ௨௯ல் போட்டிக்கு அழைப்பு
ADDED : ஆக 27, 2024 05:13 AM
சேலம்: மேஜர் தயான்சந்த் பிறந்தநாளான ஆக., 29 தேசிய விளை-யாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. அதை சிறப்பிக்கும் வகையில் சேலம் காந்தி மைதானத்தில், அன்றைய தினம் காலை, 9:00 மணிக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கைப்பந்து போட்டி, 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு கால்பந்து, 45 வயதுக்கு மேற்-பட்ட நபர்களுக்கு ஒரு கி.மீ., நடைபயணம் மற்றும் 50, 100 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளன. போட்டியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்-ளலாம்.பங்கேற்க விரும்புவோர், நேரடியாக போட்டி நடக்கும் நாளில் வந்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, கலந்து கொள்ளலாம். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல் பெற, 74017 - 03488 என்ற எண்ணில் பேசலாம். இத்தகவலை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.