/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அழைப்பு
/
நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : ஜூலை 01, 2024 03:40 AM
இடைப்பாடி: நடப்பு பருவத்தில் சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இடைப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிவாசகம் அறிக்கை:
விவசாய நிலங்களில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும்பட்சத்தில் விவசாயிகளுக்கு இழப்பை சரிகட்டும்படி, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புது வழிகாட்டுதல்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடைப்பாடி வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சோளம், நிலக்கடை பயிர்களுக்கு அடுத்த மாதம், 16 வரை விவசாயிகள், காப்பீடு செய்யலாம். ஏக்கருக்கு சோளத்துக்கு, 194 ரூபாய், நிலக்கடலைக்கு, 421 ரூபாய்- செலுத்த வேண்டும்.
விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நில உரிமை பட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமிய தொகையை அனைத்து பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம்.