/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்கலாம் ஆதிதிராவிட, பழங்குடி மாணவருக்கு அழைப்பு

ADDED : ஆக 22, 2024 01:33 AM
வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்கலாம்
ஆதிதிராவிட, பழங்குடி மாணவருக்கு அழைப்பு
சேலம், ஆக. 22-
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ஹெச்.சி.எல்., நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி, நிரந்தர வேலைவாய்ப்புடன், ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லுாரியில் பி.எஸ்சி., தஞ்சாவூரில் உள்ள சாஸ்தரா பல்கலையில் பி.சி.ஏ., அமிட்டி பல்கலையில், பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்.,ல், ஒருங்கிணைந்த மேலாண் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
எச்.சி.எல்., நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு பயிற்சி வழங்குவதோடு, ஓராண்டு செலவினம், தாட்கோவால் ஏற்கப்படும்.
ஆரம்பத்தில் மாத ஊதியம், 17,000 முதல், 22,000 ரூபாய் வரை பெறலாம். பின் திறமைக்கேற்ப, 50,000 முதல், 70,000 ரூபாய் வரை, பதவி உயர்வுப்படி, மாத ஊதியம் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற, www.tahdco.com என்ற 'தாட்கோ' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 94450 29473 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.