/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் டயர் வெடித்து விபத்து: தப்பிய விமானப்படை வீரர்கள்
/
கார் டயர் வெடித்து விபத்து: தப்பிய விமானப்படை வீரர்கள்
கார் டயர் வெடித்து விபத்து: தப்பிய விமானப்படை வீரர்கள்
கார் டயர் வெடித்து விபத்து: தப்பிய விமானப்படை வீரர்கள்
ADDED : ஆக 09, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: சென்னை, ஆவடியில் உள்ள விமானப்படையில் பணிபுரிப-வர்கள் இஸ்மாயில், 50, டிரைவர் ஆனந்த், 33.
இவர்கள் நேற்று, கோவை, சூலுார் விமான படை பயிற்சி நிலையத்துக்கு, பயிற்சி பணிக்கு காரை ஒப்படைக்க, 'இன்னோவா' காரில் சென்று கொண்டிருந்தனர். மதியம், 3:40 மணிக்கு பெத்தநாயக்கன்பா-ளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, காரின் முன்புற டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக சென்ற கார், முன்புறம் சென்ற லாரி மீது உரசி நின்றது. இதில் காரின் முன் பகுதி சேதமானது. தொடர்ந்து, 'ஏர்பேக்' வெளியானதால் இஸ்மாயில், ஆனந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசா-ரிக்கின்றனர்.