/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 04:19 AM
சேலம்: அ.தி.மு.க., பிரமுகர் கொலையில், சேலம் மாநகராட்சியின், தி.மு.க., கவுன்சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம்,62; அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலரான இவர், இருமுறை மண்டல குழு தலைவர் பதவி வகித்துள்ளார்.
ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனைக்கு எதிராக செயல்பட்ட இவர், கடந்த 3ம் தேதி மர்ம கும்பால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சியின், 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்ளிட்ட 10 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சண்முகம், சதீஷ்குமார் இடையே லாட்டரி உள்பட பல்வேறு விவகாரங்களில் முன்விரோதம் இருந்துள்ளது.
சமீபத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்பகுதியில் உள்ளவர்கள், முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து சண்முகம் இடையூறு செய்து வந்ததால் சதீஷ்குமார் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்தவர்களுக்கும், சதீஷ்குமாருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
மேலும், இந்த வழக்கில் 55 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி உள்பட, 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமி தற்போது தலைமறைவாக உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.