/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை, மகன் மீது வழக்கு
/
வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2024 01:57 AM
சேலம், காதல் விவகாரத்தில், வாலிபரை கத்தியால் தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் சிராஜ். இவரது மகளை, ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த அழகிரிசாமி என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு முல்லை நகர் பகுதியை சேர்ந்த சங்கர், 25, என்பவர் உதவி செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, ஜாகீர் அம்மாபாளையம் புறாக்கரடு பகுதியில் சங்கர் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த சிராஜ், மகன் அப்துல்லா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அப்துல்லா, மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சங்கர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.