/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிசிடிவி' கேமராக்கள் மாயம் மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி
/
'சிசிடிவி' கேமராக்கள் மாயம் மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி
'சிசிடிவி' கேமராக்கள் மாயம் மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி
'சிசிடிவி' கேமராக்கள் மாயம் மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூன் 28, 2024 02:10 AM
இடைப்பாடி, அரசு பெண்கள் பள்ளி அருகே போலீசாரால் வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் மாயமானதால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், 700க்கும் மேற்பட்டோர் உள்பட, 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அவர்களை சிலர், 'ஈவ் டீசிங்' செய்து வந்ததால், 5 ஆண்டுகளுக்கு முன்பு இடைப்பாடி, மேட்டுத்தெரு பஸ் ஸ்டாப், சந்தைப்பேட்டை, அங்காளம்மன் கோவில் தெரு பிரிவு சாலை ஆகிய இடங்களில், தலா, 2 வீதம், 6 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் மேட்டுத்தெரு பஸ் ஸ்டாப்பில் இருந்த கேமராக்கள், அதற்குரிய கம்பத்துடன் மாயமாகி உள்ளன. சந்தைப்பேட்டையில் இரு கேமராக்களும் உடைந்து தொங்கிக்கொண்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக மாணவியருக்கு ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போகும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, மாயமான கேமராக்களை, போலீசார் கண்டுபிடிக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சுமித்ரா கூறுகையில், ''கேமராக்கள் காணாமல் போக வாய்ப்பில்லை. சாலை விரிவாக்கத்தின்போது யாராவது எடுத்து வைத்திருக்கலாம். பழுதான கேமராக்களை சரிசெய்ய ஆட்களை வரச்சொல்லியுள்ளோம். அவர்கள் வந்ததும் சரிசெய்யப்படும்,'' என்றார்.