ADDED : ஜூலை 19, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், சேலம் மத்-திய சிறைக்கு நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய சிறையில் இருந்து விவசாய பணிக்கு அழைத்து சென்ற கைதிகள், சிறைக்கு பின்பகுதியில் கறி சமைத்து சாப்பிட்டது தொடர்பாக விசாரணை நடத்தினார்.
கைதிகளை அழைத்து சென்ற வார்டன்கள் மீது எடுக்கப்பட்ட நட-வடிக்கைகள் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தினார். பெண்கள் சிறைக்கு சென்ற, டி.ஐ.ஜி., அங்கு கைதிகளிடம் குறை-களை கேட்டறிந்தார். சிறையில் எந்த அசம்பாவிதமும் நடைபெ-றாமல் இருக்க, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சிறை கண்காணிப்பாளர் வினோத்திற்கு அறிவுரை வழங்கினார்.