sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய வழக்கு முக்கிய குற்றவாளி சரண்; மேலும் 2 பேர் கைது

/

வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய வழக்கு முக்கிய குற்றவாளி சரண்; மேலும் 2 பேர் கைது

வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய வழக்கு முக்கிய குற்றவாளி சரண்; மேலும் 2 பேர் கைது

வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய வழக்கு முக்கிய குற்றவாளி சரண்; மேலும் 2 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 04:17 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ஆயுதங்களுடன் வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும், 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை வீதியை சேர்ந்-தவர் பாலகிருஷ்ணன், 36; மினி சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி சவுந்தர்யா, 24. இவர்களுக்கு, 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சவுந்தர்யா, 6 மாத கர்ப்பமாக உள்ளார். பாலகிருஷ்ணனுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணின் அண்ணனான, ஆட்டையாம்பட்டி, ஹை ஸ்கூல்மேட்டை சேர்ந்த நவீன்குமார், 28, என்பவருடன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.

இதனால் கடந்த, 14ல் நவீன்குமார் உள்பட, 6 பேர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், பாலகிருஷ்ணன் வீடு புகுந்து கதவு, ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தடுக்க முயன்ற சவுந்தர்யா கையில் வெட்டு விழுந்தது. கும்பலை பிடிக்க சென்ற போலீசாரையும் தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். ஆனால், 16, 20 வயதுடைய, 3 சிறுவர்களை, போலீசார் சுற்றிவ-ளைத்து கைது செய்தனர். தப்பிய நவீன்குமார், நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் தலைமறை-வாக இருந்த, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தி, 27, என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து நேற்று, தலைமறைவாக இருந்த மற்றொருவரான, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், 30, என்பவ-ரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளி-யான நவீன்குமாரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவ-டிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us