ADDED : ஆக 09, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை ராஜ மாரியம்மன் கோவிலில், 35 ஆண்டுகளுக்கு முன் தேர் திருவிழாவின்போது இரு
தரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இந்நிலையில் அனைத்து சமூகத்தினரிடமும் பேச்சு நடத்தி, கடந்த ஜூலை, 31ல் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் முளைப்-பாரி, பால் குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்-துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மதியம், 2:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜமாரியம்மனை வைத்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியே தேரை இழுத்துச்சென்றனர். இரவு, 7:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர்.