/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 09, 2024 02:27 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின் அலங்கரிக்கப்பட்ட அம்மன், தேரில் எழுந்த-ருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா கணபதி பூஜையுடன் தேரோட்டம் தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிக-ளுடன், திரு.வி.க., பாதை, மாரிமுத்து முதலி தெரு, தங்க செங்-கோடன் முதலி தெரு, செங்குந்தர் மேட்டு தெரு, அண்ணாமலை முதலி தெரு, செங்குந்தர் மாரியம்மன் கோவில் வீதி வழியே தேர் வலம் வந்து கோவிலை அடைந்தது. அங்கும் ஏராளமான பக்-தர்கள்
வழிபட்டனர்.
கொடியேற்றம்
ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா-வையொட்டி நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு மூலவர் அம்ம-னுக்கு எதிரே உள்ள தங்க கொடி மரத்துக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூசாரி, 'சிங்க வாகனம்' வரையப்பட்ட கொடியை, பக்தர்களின், 'ஓம்சக்தி' 'பராசக்தி' கோஷம் முழங்க, கொடிம-ரத்தில் ஏற்றினார். தொடர்ந்து சாரங்கள் கட்டப்பட்டு வரும் தேரில், கொடி ஏற்றி கலசம், குடையை வைத்து பூஜை செய்து முறைப்படி தேர் திருவிழா தொடங்கியது. மூலவர் அம்மன் பல-வித பழங்களால் அலங்கரிக்கப்பட்டார். 13ல் சத்தாபரணம், குண்டம் இறங்குதல், 14ல் தேரோட்டம், 15ல் பொங்கல் வைபவம், கம்பம் கங்கையில் சேர்த்தல், 16ல் பூங்கரகம், அக்னி கரகம், தீச்சட்டி ஊர்வலங்கள், வண்டி வேடிக்கை, 17ல் ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.