/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் இருந்து விழுந்த சென்னை வாலிபர் சாவு
/
ரயிலில் இருந்து விழுந்த சென்னை வாலிபர் சாவு
ADDED : மே 03, 2024 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் காகங்கரை - சாமல்பட்டி ஸ்டேஷன்கள் இடையே, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இறந்து கிடந்தவர், சென்னை, சாலிகிராமம், விஜயராவகபுரம், 5வது தெருவை சேர்ந்த விக்னேஷ், 26. பெயின்டரான அவர், கடந்த 1, இரவு கோவை செல்வதற்கு, தன்பாத் - ஆலப்புழா ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணித்தார். ஆனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அவர், தலையில் அடிபட்டு இறந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.