/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்கன் பிரியாணி ரூ.180 செலவின பட்டியல் வெளியீடு
/
சிக்கன் பிரியாணி ரூ.180 செலவின பட்டியல் வெளியீடு
ADDED : மார் 24, 2024 01:41 AM
சேலம், லோக்சபா தொகுதி வேட்பாளர் அதிகபட்சம், 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. வரும், 27க்குள் வேட்புமனு தாக்கல் முடிந்ததும் களத்தில் இறங்கும் வேட்பாளர்கள், நிறைய செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது. செலவு செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல் விபரம்:
உணவு வகைகள்: அசைவ அளவு சாப்பாடு, 150 ரூபாய்; சைவ சாப்பாடு, 70; சைவ பிரியாணி, 60; வெரைட்டி சாப்பாடு, 40; உப்புமா, 30 ரூபாய்; ஜோடி இட்லி, 20; ஜோடி சப்பாத்தி, 40; பூரி செட், 40; வடை, 10; போண்டா, 15; பொங்கல், 40; ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில், 20; மட்டன் பிரியாணி, 240; சிக்கன் பிரியாணி, 180, ஆம்லெட், 15; டீ, 12; காபி, 15; சிறு கூல்டிரிங்ஸ், 15 ரூபாய்.
தங்கும் அறை: சிங்கிள் அறை, 510; 'ஏசி' வசதியுடன் சிங்கிள் அறை, 850 ரூபாய்; டபுள் அறை, 850; 'ஏசி' வசதியுடன் டபுள் அறை, 1,100 ரூபாய்.
எல்.இ.டி., டிவி: 32 அங்குலம், 3,500 ரூபாய்(நாள் வாடகை); 40 அங்குலம், 4,000; 43 அங்குலம், 5,000; ஏர்கூலர், 1,200; ஆடியோ, 2 ஸ்பீக்கர் பாக்ஸ், 3,200; டியூட் லைட் வாடகை, 20; மின்விசிறி, 300; மேடை அமைக்க ஒரு சதுரடி, 400; பந்தல் அமைக்க சதுரடி, 800; சாமியானா பந்தல், 10க்கு, 20 அடி அளவில் அமைக்க, 1,000 ரூபாய். பிளாஸ்டிக் சேர், 10; வி.ஐ.பி., சேர் வாடகை, 150; மைக் ஸ்டாண்ட், 500; சாதா துண்டு, 70; சாதா சால்வை, 130; சாதா வேட்டி, 150 ரூபாய் என ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருநாள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

