/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சட்டவிரோத கும்பல் கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
சட்டவிரோத கும்பல் கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சட்டவிரோத கும்பல் கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சட்டவிரோத கும்பல் கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : செப் 01, 2024 03:25 AM
சேலம்: மாநகராட்சி அலட்சியத்தால் சட்டவிரோத கும்பல் கட்டுப்-பாட்டில் சிறுவர் பூங்கா உள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.
திருமணிமுத்தாற்றை சீர்படுத்தும் விதமாக, சீர்மிகு நகர திட்-டத்தில் திருமணிமுத்தாறு, வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி திட்டம், 36 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இதில் அணைமேட்டில் இருந்து ஆனந்தா பாலம் வரையும், அங்கிருந்து அப்சரா இறக்கம் வரையும், இரு கட்டமாக திருமணிமுத்தாற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதையொட்டி நடைபாதை அமைத்து பூங்கா அமைக்க நடவ-டிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி அணைமேடு அருகே காசி முனியப்பன் கோவில் வீதியில் திருமணிமுத்தாற்றின் கரையில் சிறுவர் பூங்கா அமைக்-கப்பட்டது. அங்கு சறுக்கு, ஊஞ்சல், ஏணி உள்ளிட்டவையுடன், நடைபாதை, இருக்கை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு, 2020ல் பூங்கா திறக்கப்பட்டது.
உடனே பராமரிப்பு என பூட்டினர். பின் அனைத்து நிதி ஒதுக்கீ-டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு பூங்கா அமைத்ததையே மறந்துவிட்டனர். 4 ஆண்டுகளாக பூங்கா திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விளையாட்டு உபகரணங்கள், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புதர் மண்டி வீணாகி வருகிறது. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், போதை பொருட்களின் வினியோக இடமாகவும் மாறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தபோது அங்கு பூங்கா உள்ளதா என திருப்பி கேட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பூங்கா பராமரிப்பின்றி புற்கள் முளைத்து புதராக காணப்படுகின்றன. இதனால் பல்வேறு சட்ட-விரோத செயல்கள் நடக்கின்றன. பூங்கா திறக்கப்பட்டால் அவற்-றுக்கு தடை வரும் எனக்கூறி அங்கு யாரையும் வரவிடாமல் சட்-டவிரோத கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய பூங்கா பயன்படுத்தப்படாமலேயே வீணாகி வருகிறது. இனியா-வது சுத்தம் செய்து காவலாளி நியமித்து பூங்காவை பயன்பாட்-டுக்கு கொண்டு வர மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.