/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் கடை மாற்றியதால் பொதுமக்கள் சாலை மறியல்
/
ரேஷன் கடை மாற்றியதால் பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 30, 2024 02:47 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 11 வது வார்டுக்கு உட்பட்ட பொன்னம்மா-பேட்டை அண்ணா நகர் பகுதியில், 1, 2ம் நம்பர் என இரு ரேஷன் கடைகள் உள்ளன, இந்த கடைகளில், 2,000 ரேஷன் கார்-டுகள் உள்ளது. இரு கடைகளிலும் உள்ள, 800 ரேஷன் கார்டு தாரர்களை பிரித்து, அண்ணா நகர் மூன்றாவது கடையில் பொருட்கள் வாங்கும்படி அதிகாரிகள் கூறினர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மூன்-றாவது கடை தொலைவில் உள்ளதால் சிரமமாக இருக்கும். எனவே, எங்களுக்கு பழைய கடையிலேயே பொருட்கள் வாங்க அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம-டைந்த அப்பகுதி மக்கள், நேற்று பொன்னம்மாபேட்டை தண்ணீர் தொட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், 80க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்-டது.உடனே மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் சென்று பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து, பழைய ரேஷன் கடையிலேயே பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்-வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர்.