/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
/
6 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூலை 18, 2024 02:04 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் நாளை, ஆறு இடங்களில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 20 ஒன்-றியங்களில், 367 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளில், ஆக., 6 வரை 92 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஐந்தாம் நாளான, நாளை பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கெஜல்நாயக்கன்பட்டி சமுதாய கூடம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் காருவள்ளி ராமச்-சந்திரா திருமண மண்டபம், ஓமலுார் ஒன்றியத்தில் கரிசல்பட்டி அருண் மஹால்.
வீரபாண்டி ஒன்றியத்தில், அரியானுார் ஆதித்யா மஹால், தலை-வாசல் ஒன்றியத்தில் நாவக்குறிச்சி அம்மன் மண்டபம், கொங்க-ணாபுரம் ஒன்றியத்தில் புதுப்பாளையம் திருக்குறள் திருமண மண்-டபம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இவற்றில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.