/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் அருகே கழிப்பறை அகற்ற கலெக்டர் உத்தரவு
/
கோவில் அருகே கழிப்பறை அகற்ற கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 27, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சந்தை திடலை பார்வையிட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கட்டண பொது கழிப்பறையை அகற்றிவிட்டு, அதற்கு பக்கத்தில் புதிதாக கட்டி பயன்படுத்தாமல் உள்ள பொது கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ராணிக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் ஆய்வு செய்தார்.