/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர், சாலைக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
குடிநீர், சாலைக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
குடிநீர், சாலைக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
குடிநீர், சாலைக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 01, 2024 03:40 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பருவ மழை காலத்தில் மேற்-கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் வாய்க்கால் துார்வாரப்பட்டு மழைநீர் தங்குதடையின்றி செல்லும்படி பொதுப்பணித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் குறிப்-பிட்ட நாள் இடைவெளியில் சுத்தம் செய்து குளோரினேசன் செய்-யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பருவ மழை பணி குறித்து அனைத்து உள்ளாட்சித்-துறை அலுவலர்கள், வாரந்தோறும், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தடையின்றி மின்சாரம் கிடைக்க, இடையூறான மரக்கிளைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். மழையால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டால் அதை உடனே சரிசெய்ய வேண்டும். மக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியா-காத அளவுக்கு, குடியிருப்பு பகுதியை சுகாதாரமாக வைத்திருப்ப-தோடு விழிப்புணர்வு ஏற்படுத்த கொசு ஒழிப்பு பணியையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். குடிநீர், மின்சாரம், சாலை வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலர்கள் பணிபு-ரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.