/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'
ADDED : ஆக 09, 2024 02:18 AM
ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனை எதிரே பத்திரப்பதிவுத்துறை அலு-வலகம் உள்ளது. அங்கு நேற்று காலை அலுவலகம் திறக்கப்-பட்டு, பத்திரப்பதிவுக்கு மக்கள் காத்திருந்தனர். அப்போது கழிப்-பறைக்கு சென்ற ஒருவர், பாம்பு இருப்பதை பார்த்து அதிகாரிக-ளுக்கு தகவல் அளித்தார். பின் ஓமலுார் தீயணைப்பு வீரர்க-ளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பாம்பு பிடிக்கும் கருவியால், அங்கிருந்த, 'கொம்பேரி மூக்கன்' பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் விட்-டனர்.
கிணற்றில் மலைப்பாம்பு
தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி தேனுாற்றுவா-ரியை சேர்ந்த விவசாயி தங்கதுரை, 50. இவரது விவசாய கிணற்றில் பாம்பு உள்ளதாக கிடைத்த தகவல்படி, ஆத்துார் தீய-ணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்-பினை உயிருடன் பிடித்து, ஆத்துார் கோட்ட வன அலுவல-கத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பாம்பை, கல்வராயன்-மலை பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.